பெண் வயிற்றில் இருந்த 22 கிலோ கட்டி நீக்கம்

பெண் வயிற்றில் இருந்த 22 கிலோ கட்டி நீக்கம்

2 mins read
c599cb07-72e0-42ce-b14c-592be0147c44
-
Google News Preferred Icon

திருப்பத்தூர்: ஓர் ஆண்டுக்கும் மேலாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணின் வயிற்றில் இருந்து 22 கிலோ எடையுள்ள புற்றுநோய்க் கட்டியை (படம்) அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் தனவந்தி, 45. கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த ஓர் ஆண்டாகவே வயிற்று வலியுடன் பசியின்மையும் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நாளுக்கு நாள் வயிறு பெரிதாகிக்கொண்டே போக, தனவந்தி, சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது வயிற்றில் வளர்ந்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.

ஏனெனில், அந்தக் கட்டி 22 கிலோ எடை இருந்தது. அத்துடன், அது ஓர் புற்றுநோய்க் கட்டி என்பது கண்டறியப்பட்டதும் அதிர்ந்தனர்.

இதுகுறித்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் விஜயா கூறுகையில், "ஓராண்டுக்கும் மேலாகவே தனவந்தி வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் செரிமானப் பிரச்சினை, வயிற்று உப்புசம் என சாதாரணமாக நினைத்துக்கொண்டு நாள்களைக் கடத்தியிருக்கிறார். இதற்கிடையே கொரோனாவும் வந்துவிட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவில்லை.

"ஒருகட்டத்தில் வயிற்றுவலி அதிகமாக 'ஸ்கேன்' செய்து பார்த் ததில் வயிற்றில் ஏதோ கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அதனை யடுத்து இங்கு வந்தார்.

"65 கிலோ எடை இருந்தவர் கட்டியை நீக்கியபிறகு 43 கிலோ எடைக்கு குறைந்துள்ளார். இதுதான் அவருடைய இயல்பான எடை. நீக்கப் பட்ட கட்டியைப் பரிசோதித்ததில் புற்றுநோய்க் கட்டி எனத் தெரியவந்தது.

"தொடர்ந்து நோயாளிக்குப் புற்றுநோய்க்கான மருந்தினை நரம்பு வழி செலுத்த உள்ேளாம். மாதம் ஒருமுறை என ஆறு மாத காலத்திற்கு மருந்து செலுத்த வேண்டும். இப்போது அவர் நலமாக உள்ளார்," என்றார்.