சென்னையில் இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்

1 mins read
87df8411-c88e-4719-a0aa-122c2b787e0e
படம்: தமிழக ஊடகம் -

சென்னையில் இன்று மதியம் ஏற்பட்ட இலேசான நில அதிர்வு காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதியம் சுமார் 2.39 மணியளவில் ஏற்பட்ட நில அதிர்வை திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களால் உணர முடிந்தது.

எனினும், இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இலேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நில அதிர்வுசென்னை