இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம்: இடைத்தரகர் சுகேஷ் வீட்டில் இருந்து 16 சொகுசு கார்கள் பறிமுதல்

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம்: இடைத்தரகர் சுகேஷ் வீட்டில் இருந்து 16 சொகுசு கார்கள் பறிமுதல்

2 mins read
87a63017-b568-4cba-acf1-3569ed814587
-

சென்னை: இரட்டை இலை சின்­னத்­தைப் பெற தேர்­தல் ஆணைய அதி­கா­ரி­க­ளுக்கு லஞ்­சம் கொடுக்­கப்­பட்ட வழக்கு மீண்­டும் சூடு­பி­டித்­துள்­ளது.

இந்த வழக்­கின் முக்­கிய குற்ற­வா­ளி­யான பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்த சுகேஷ் சந்­தி­ர­சே­க­ரின் சென்னை பங்­க­ளா­வில் மத்­திய அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் நடத்திய அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது பல முக்­கிய ஆவ­ணங்­கள் சிக்­கி­ய­தா­கத் தெரி­கிறது.

மேலும் இரண்டு கிலோ தங்­கம், 8.5 லட்­சம் ரூபாய் ரொக்­கப்­ப­ணம் ஆகி­ய­வற்­றை­யும் அதி­கா­ரி­கள் பறிமு­தல் செய்­த­னர்.

கடந்த 2017ஆம் ஆண்டு அதி­முக பிள­வுப்­பட்­டி­ருந்­த­போது இரட்டை இலை சின்­னத்தைப் பெறு­வ­தற்­காக டிடிவி தின­க­ரன் தரப்பு தேர்­தல் ஆணை­யத்தை அணு­கி­யது.

அப்­போது பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்த சுகேஷ் சந்­தி­ர­சே­கர், அர­சி­யல் செல்­வாக்கு மிக்­க­வ­ராக தம்மை அறி­மு­கப்­ப­டுத்­திக் கொண்டு தின­க­ரன் தரப்பை அணு­கி­ய­தா­கத் தெரி­கிறது.

மேலும், தேர்­தல் ஆணை­யத்­தில் உள்ள தொடர்­பு­க­ளைப் பயன்­ப­டுத்தி இரட்டை இலை சின்­னத்தை வாங்­கித்­தர இய­லும் என்று தின­க­ரன் தரப்­புக்கு உறுதி அளித்­த­தா­க­வும் ஒரு தகவல் வெளியானது.

இந்­நி­லை­யில், தேர்­தல் ஆணை­யத்­துக்கு லஞ்­சம் கொடுக்க முயன்ற குற்­றச்­சாட்­டின் பேரில் டிடிவி தின­க­ரன், அவ­ரது நண்­பர் மல்­லி­கார்­ஜுன், இடைத்­த­ர­க­ரா­கச் செயல்­பட்ட சுகேஷ் சந்­தி­ர­சே­கர் ஆகி­யோர் கைதா­கி­னர்.

இது தொடர்­பாக அப்­போது ஊட­கங்­களில் பல்­வேறு பர­ப­ரப்­புத் தக­வல்­கள் வெளி­யா­கின. பின்­னர் தின­க­ரன் உள்­ளிட்­டோர் பிணை­யில் விடு­த­லை­யான நிலை­யில், சுகேஷ் சந்­தி­ர­சே­கர் மட்­டும் இன்­னும் சிறை­யில் உள்­ளார்.

அவர் பல்­வேறு தரப்­பி­னரை ஏமாற்றி பண மோசடி செய்­த­தாக புகார்­கள் உள்­ளன. இதன் மூலம் கோடிக்­க­ணக்­கில் சம்­பா­தித்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், டெல்லி அம­லாக்­கத்­து­றை­யி­னர் நேற்று முன்­தி­னம் சென்­னை­யில் உள்ள பங்­களா உள்­ளிட்ட சுகேஷ் சந்­தி­ர­சே­க­ருக்­குச் சொந்­த­மான பல்­வேறு இடங்­களில் அதி­ர­டிச் சோதனை மேற்­கொண்­ட­னர்.

விடிய விடிய நடத்­தப்­பட்ட சோத­னை­யின்­போது பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள் கிடைத்­த­தாக தெரி­கிறது.

மேலும், சென்­னை­யில் உள்ள சுகே­ஷின் பங்­களா வீட்­டில் 16 சொகுசு கார்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது அதி­கா­ரி­களுக்கு அதிர்ச்சி அளிப்­ப­தாக இருந்­தது.

இதை­ய­டுத்து கார்­கள், ரொக்­கப்­ப­ணம், தங்­கம் ஆகி­ய­வற்றை பறி­மு­தல் செய்த அதி­கா­ரிகள் சுகே­ஷின் வீட்­டுக்கு 'சீல்' வைத்துள்­ள­னர்.