பாலியல் தொல்லை புகார்: தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராகவன் பதவி விலகல்

பாலியல் தொல்லை புகார்: தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராகவன் பதவி விலகல்

2 mins read
26ba0531-4c15-461a-977f-1c39ea95f5d9
கே.டி.ராகவன். படம்: ஊடகம் -

சென்னை: தம் மீதான பாலி­யல் குற்­றச்­சாட்டை மறுத்­துள்ள தமிழக பாஜக பொதுச்­செ­ய­லா­ளர் கே.டி.ராக­வன், கட்­சிப் பொறுப்­பில் இருந்து தாம் வில­கு­வ­தாக அறி­வித்­துள்­ளார்.

அவ­ரைப் பற்றி சமூக வலைத்­தளங்­களில் பகி­ரப்­பட்டு வரும் ஒரு காணொ­ளிப் பதிவு பாஜக வட்­டா­ரங்­களில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

பாஜக சார்­பில் கடந்த சில ஆண்­டு­க­ளாக தொலைக்­காட்சி விவா­தங்­களில் பங்­கேற்­ற­தன் மூலம் அர­சி­யல் களத்­தில் நன்கு அறி­மு­க­மா­ன­வர் கே.டி.ராக­வன். அவரை மையப்­ப­டுத்தி நேற்று காலை சமூக வலைத்­த­ளங்­களில் ஓரு காணொளிப்­ப­திவு வெளி­யா­னது.

பாஜ­க­வில் பல ஆண்டு­களாக பாலி­யல் சீண்­டல்­கள் நடந்து வரு­வ­தா­க­வும் பாதிக்­கப்­பட்ட பெண்­கள் புகார் அளிக்க தயங்கு­வ­தா­க­வும் அந்த காணொ­ளிப் பதி­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

மேலும், பாதிக்­கப்­பட்ட பெண்­கள், முக்­கிய நிர்­வா­கி­க­ளுக்கு எதி­ராக புகார் தெரி­விக்­கக்கூடாது என மிரட்­டப்­பட்­ட­தா­க­வும் தம்­மி­டம் உள்ள மேலும் பல காணொ­ளிப் பதி­வு­களை ஆதா­ரங்­க­ளாக வெளி­யிடத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அந்த காணொ­ளி­யில் ஒலிக்­கும் குர­லுக்­குச் சொந்­தக்­கா­ரர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தக் காணொ­ளிப் பதிவு மிகுந்த அதிர்ச்சி அளிப்­ப­தாக தெரி­வித்­துள்ள கே.டி.ராக­வன், நேற்று காலை தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­ம­லையை நேரில் சந்­தித்­துப் பேசி­னார்.

அதன் பின்னர் வெளி­யிட்ட அறிக்கை ஓன்­றில், தம்­மைப் பற்றி தமி­ழக மக்­க­ளுக்­கும் தமது கட்சி­யி­ன­ருக்­கும் நன்கு தெரி­யும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

30 ஆண்­டு­க­ளாக எந்த ஒரு பிர­தி­ப­ல­னும் இன்­றித் தாம் மக்­கள் பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் தம்­மை­யும் பாஜ­க­வை­யும் களங்­கப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் காணொ­ளிப் பதிவு வெளி­யாகி உள்­ளது என்­றும் ராக­வன் கூறி­யுள்­ளார்.