தேவநேய பாவாணரின் பேத்திக்கு அரசுப் பணி

தேவநேய பாவாணரின் பேத்திக்கு அரசுப் பணி

1 mins read
f31e0bf4-e27e-4f91-92c3-2ddeb26209e5
-
Google News Preferred Icon

சென்னை: தமிழறிஞர் தேவநேய பாவாணரின் பேத்தியான ரச்சேல் ஜெமிமாவுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வறுமையில் இருப்பதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து பாவா ணரின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

"தமிழ் ஆட்சிமொழி, வளர்ச்சித்துறை சார்பில் ரச்சேல் ஜெமிமாவை நேரில் அழைத்து உரிய உதவிகளைச் செய்யுமாறு முதல்வர் பணித்துள்ளார்.

"தமிழறிஞர்களின் குடும்பம் எந்தக் காலத்திலும் எந்தவிதமான வறுமைக்கோ, கஷ்டமான சூழ்நிலைக்கோ வந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.

"மறைமலை அடிகளாரின் பேரன் அப்படியொரு சூழ்நிலையில் இருப்பதை அறிந்த முதல்வர் உடனடியாக அவருக்கு அரசுப் பணி வழங்கினார்," என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.