அரசு அறிவிப்பு: ஆறு நகராட்சிகளின் தரம் உயர்வு

அரசு அறிவிப்பு: ஆறு நகராட்சிகளின் தரம் உயர்வு

2 mins read
7867f494-08f3-4622-889a-443a94255916
-

28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு; நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்­ளாட்சி நிர்­வா­கத்­தின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்­தும் வகை­யில் காஞ்­சி­பு­ரம் உட்­பட ஆறு நக­ராட்­சி­க­ளின் தரம் உயர்த்­தப்­ப­டு­கிறது.

தாம்­ப­ரம் பகுதி மாந­க­ராட்­சி­யாக தரம் உயர்த்­தப்­படும் என்­றும் மாநி­லம் முழு­வதும் உள்ள 28 பேரூ­ராட்­சி­கள் நக­ராட்­சி­க­ளாக தரம் உயர்த்­தப்­படும் என்­றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்­டப்­பே­ர­வை­யில் அறி­வித்­தார்.

அப்­போது, தமி­ழ­கத்­தில் கடந்த 2011ஆம் ஆண்டு கணக்­கெ­டுப்­பின்­படி நகர்ப்­புற மக்­கள் தொகை 48.45 விழுக்­கா­டாக உள்­ளது என்­றும் இப்­போது அந்த எண்­ணிக்கை சுமார் 53 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது என்­றும் அமைச்­சர் நேரு குறிப்­பிட்­டார்.

எனவே, மாந­க­ராட்­சி­கள், நக­ராட்­சி­களை ஒட்­டி­யுள்ள நகர்ப்­புறத் தன்­மை­யோடு உள்ள பகு­தி­களை நகர்ப்­பு­றங்­க­ளோடு இணைத்து தேவை­யான கட்­ட­மைப்பு வச­தி­கள் ஏற்­ப­டுத்­து­வது இன்­றி­ய­மை­யா­த­தாக கரு­தப்­ப­டு­கிறது என்­றும் அமைச்­சர் நேரு விளக்­கம் அளித்­தார்.

"நக­ராட்­சி­யாக உள்ள உள்­ளாட்சி அமைப்­பு­களை மாநக­ராட்­சி­யா­க­வும் பேரு­ராட்­சி­கள், ஊராட்சி அமைப்­பு­களை நக­ராட்­சி­யா­க­வும் மாற்­றக்­கோரி பல்­வேறு தரப்­பு­களில் இருந்­தும் அர­சுக்குத் தொடர் கோரிக்­கை­கள் வந்த வண்­ணம் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், மாந­க­ராட்­சி­கள், நக­ராட்­சி­களில் சில­வற்றை விரி­வாக்­கம் செய்­தி­ட­வும் பலர் வலி­யு­றுத்தி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

நகர்ப்­பு­றத்­தன்மை, மக்­கள்­தொகை அடர்த்தி, ஆண்டு வரு­மா­னம், பொரு­ளா­தார முக்­கி­யத்­து­வம் உள்­ளிட்ட பல்­வேறு கார­ணி­க­ளின் அடிப்­ப­டை­யில் உள்­ளாட்சி அமைப்­பு­கள் தரம் உயர்த்­தப்­ப­டு­வ­தா­க அமைச்­சர் கே.என்.நேரு குறிப்­பிட்­டார்.

மேலும், நகர்ப்­பு­ற­மாக மாறி வரும் பகு­தி­க­ளி­லும் நக­ரத்­திற்கு இணை­யான அடிப்­படை வச­தி­களை அளித்­தி­டும் நோக்­கி­லும் தரத்தை உயர்த்­தும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

"தரம் உயர்த்­தப்­படும் அல்­லது விரி­வாக்­கம் செய்­யப்­ப­டும்­போது மாந­க­ராட்­சி­கள், நக­ராட்­சி­களு­டன் இணைக்­கப்­ப­டு­கின்ற ஊராட்­சி­களில் ஏற்கெனவே தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அல்­லது தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற உறுப்­பி­னர்­கள் தொடர்ந்து அவர்­க­ளது பத­விக்­கா­லம் முடி­யும் வரை அப்­ப­த­வி­க­ளி­லேயே தொடர்­வார்­கள்.

"சம்­பந்­தப்­பட்ட உள்­ளாட்சி அமைப்­பின் பத­விக்­கா­லம் முடி­வ­டை­கின்­ற­போது இணைக்­கப்­படும் பகு­தி­கள் புதி­தாக உரு­வாக்­கப்­படும் அல்­லது விரி­வாக்­கம் செய்­யப்­படும் நக­ராட்சி அல்­லது மாந­க­ராட்­சி­யின் முழு­மை­யான ஆளு­மைக்கு உட்­ப­டுத்­தப்­படும்," என்­றும் அமைச்­சர் கே.என்.நேரு தெளி­வு­ப­டுத்­தி­னார்.

அர­சின் இந்த நட­வ­டிக்கை கார­ண­மாக தரம் உயர்த்­தப்­படும் பகு­தி­களில் அடிப்­படை வச­தி­க­ளுக்­கான கட்­ட­மைப்பு மேப்­ப­டுத்­தப்­படும் என்­ப­து­டன் சொத்து மதிப்­பும் அதி­க­ரிக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது. இத­னால் அப்­ப­கு­தி­களில் வசிப்­ப­வர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.