கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கொல்லப்பட்டதாக சகோதரர் புகார்

சென்னை: கோட­நாடு கொலை வழக்­கில் கைதுசெய்­யப்­பட்­டுள்ள முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் கார் ஓட்­டு­நர் கன­க­ராஜ் விபத்­தில் இறக்­க­வில்லை என்­றும் அவர் திட்­ட­மிட்டு கொலை செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவ­ரது அண்­ணன் தன­பால் தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து இந்த வழக்கு சூடு­பி­டித்­துள்­ளது.

முன்­னாள் முதல்­வர் ஜெய­லலிதா கால­மான பிறகு அவ­ருக்குச் சொந்­த­மான கோட­நாடு வீட்­டில் இருந்த சில பொருள்­கள் கொள்­ள­ய­டிக்­கப்­பட்­டன. அப்­போது அங்­கி­ருந்த காவ­லர் கொல்­லப்­பட்­டார்.

இது தொடர்­பாக ஜெய­ல­லி­தா­வின் கார் ஓட்­டு­நர் கன­க­ராஜ் முக்­கிய குற்­ற­வா­ளி­யாக அடை­யா­ளம் காணப்­பட்­டி­ருந்­தார். இந்நி­லை­யில் அவர் விபத்து ஓன்­றில் சிக்கி உயி­ரி­ழந்­தார்.

விபத்து என்று முடிவு செய்த போலி­சார் விசா­ரணை முடிந்­த­தாக அறி­வித்­த­னர்.

இந்நிலையில், அண்மைய சில தினங்களாக கோடநாடு கொலை வழக்கில் போலிசார் மீண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்­கில் முக்­கிய குற்­ற­வா­ளி­யான சயான் (படம்) கடந்த வாரம் ஊட்டி போலி­சா­ரி­டம் மீண்­டும் பர­ப­ரப்பு வாக்­கு­மூ­லம் அளித்­தார். அதில், கோட­நாடு சம்­ப­வத்­தில் மேலும் பல முக்­கிய புள்­ளி­க­ளுக்கு தொடர்பு உள்­ளது என சயான் குறிப்­பிட்­டுள்­ள­தாக தக­வல்­கள் உல­வு­கின்­றன.

இந்­நி­லை­யில் மற்­றொரு திடீர் திருப்­ப­மாக, கார் ஓட்­டு­நர் கன­க­ராஜ் விபத்­தில் இறக்­க­வில்லை என அவ­ரது சகோ­த­ரர் கூறி­யுள்­ளார். தன் தம்பி கொலை செய்­யப்­பட்­டி­ருக்க வாய்ப்­புள்­ள­தாக அவர் தெரி­வித்­தி­ருப்­பதை அடுத்து, கன­க­ராஜ் விபத்து வழக்கு விரை­வில் கொலை வழக்­காக மாற்­றப்­படும் எனத் தெரி­கிறது.

இதற்­கி­டையே, கோட­நாடு வழக்­கின் புலன் விசா­ரணை அறு­பது நாள்­களில் முடிக்­கப்­படும் என உயர் நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

மேலும், இந்த வழக்குடன் தொடர்­பு­டைய புதிய ஆதா­ரங்­கள் குறித்த விவ­ரங்­கள் எதை­யும் இப்­போது வெளி­யிட இய­லாது என்­றும் அவ்­வாறு வெளி­யிட்­டால் அவற்றை அழிப்­ப­தற்­கான முயற்­சி­கள் நடக்­கக்­கூ­டும் என்­றும் அர­சுத்­த­ரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தத் திடீர் திருப்பங்களால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!