தமிழகத்தில் 4,200 பேருக்கு கறுப்புப் பூஞ்சை

தமிழகத்தில் 4,200 பேருக்கு கறுப்புப் பூஞ்சை

1 mins read
f19d6a62-3fb7-4065-9da8-0ee3b6552528
-
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் இதுவரை 4,200 பேருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 1,714 பேர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இப்போது 207 பேர் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.