தகராறு: நண்பரை உயிரோடு புதைத்த மதுப்பிரியர்கள்

தகராறு: நண்பரை உயிரோடு புதைத்த மதுப்பிரியர்கள்

2 mins read
a66317a3-1c78-4317-9658-44ef1c899383
மண்ணில் புதைக்கப்பட்ட அஜித்குமார். படம்: ஊடகம் -

தூத்­துக்­கு­டி: மது அருந்­திக்கொண்­டி­ருந்த நண்­பர்­க­ளின் உள­றல் பேச்சு ஒரு சம­யத்­தில் எல்லை மீறிப் போக, வாக்­கு­வா­தம் முற்றி கைக­லப்­பாக மாறி­யது.

மது விருந்து வைத்த அஜித்குமார் என்ற வாலி­பரை அவ­ரது சக நண்­பர்­கள் பல­மாக அடித்­துத் தாக்கி, அவரை உயி­ரோடு மண்­ணில் புதைத்­த­னர்.

அவரது தோள்­பட்டை அள­வுக்கு மண்­ணைத் தள்ளி மூடிக்கொண்­டி­ருந்­த­போது அவர் மரண பயத்­தில் ஓலமிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்­கம்­பக்­கத்­தி­னர் ஓடி வர, அஜித்குமாரின் நண்­பர்­கள் தப்­பி­யோடி­னர். அஜித் உயிர் பிைழத்தார்.

தூத்­துக்­குடி மாவட்­டம், முத்­தை­யா­பு­ரத்­தில் நடந்த இந்த சம்­ப­வத்­தைத் தொடர்ந்து அஜித்குமாரின் நண்­பர்­கள் மூவரையும் போலிசார் கைது செய்தனர்.

முத்­தை­யா­பு­ரம் கிருஷ்­ணா­ந­கரைச் சேர்ந்­த­வர் முத்­து­கி­ருஷ்­ணன். இவரது மகன் அஜித்­கு­மார், 24. இவர் சாயம் அடிக்­கும் தொழில் செய்து வரு­கி­றார். தேவ ஆசீர்­வா­தம் (39), தர்ம முனி­ய­சாமி (23), இசக்கி மணி (20) ஆகி­யோர் அஜித்குமாரின் நண்­பர்­களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், அஜித்­கு­மார் கைபேசி வாங்­கு­வ­தற்­காக தேவ ஆசீர்­வா­தத்­தி­டம் ரூ.5,000 கட­னாக வாங்­கி­யுள்­ளார். ஆனால், அந்தப் பணத்­தில் கைபேசி வாங்­கா­மல் நண்­பர்­கள் நால்­வ­ரும் சேர்ந்து மது­கு­டித்து செலவு செய்துவிட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதைத்தொடர்ந்து, முத்­தையாபுரத்­தில் நேற்று முன்­தி­னமும் நால்வரும் சேர்ந்து மது­ அருந்தியுள்ளனர்.

அப்­போது, தேவ ஆசீர்­வா­தம் தான் கட­னாகக் கொடுத்த ரூ.5,000 பணத்தைத் திருப்பித் தரும்படி அஜித்­கு­மா­ரி­டம் கேட்டுள்ளார். இதற்கு, "அந்தப் பணத்தில் நாம் எல்­லோ­ரும் சேர்ந்துதானே மது அருந்தி செல­வ­ழித்­தோம். எனவே நான் மட்­டும் எப்­படி பணத்­தைத் திருப்பி தர­மு­டி­யும்?" என்று அஜித்குமார் ேகட்­டுள்­ளார். இத­னால் அவர்­க­ளுக்­குள் தக­ராறு ஏற்­பட்டுள்ளது.

இதில் ஆத்­தி­ரமடைந்த தர்ம முனி­ய­சாமி, இசக்கி மணி ஆகி­யோர் அருகே கிடந்த கம்­பால் அஜித்­கு­மாரை தாக்க, தேவ ஆசீர்­வா­தம் கையில் வைத்­தி­ருந்த கத்­தி­யால் அஜித்­கு­மா­ரின் முது­கில் குத்தியுள்ளார். தொடர்ந்து நண்பர்கள் மூவரும் சேர்ந்து அஜித்­கு­மாரை உயி­ரோடு புதைத்தனர்.