மூன்று நாள்களுக்கு வழிபடத் தடை
சென்னை: கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் விதத்தில் ஆலயங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை தரிசனத்திற்கு விதித்துள்ள தடை தொடரும் எனவும் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் இந்த தொற்று பாதிப்பு குறைவாக இருந்தால் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பைக்கில் ஊர் சுற்றும் பச்சைக்கிளி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம் பகுதியைச் சேர்ந்த வினோதேவ் என்ற இளைஞர் பச்சைக்கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்தக் கிளி, வினோதேவ் எப்போது பைக்கில் வெளியே சென்றாலும் அவரது தோளில் அமர்ந்தபடி இறுகப் பற்றிக்கொண்டு பயணம் செய்து வருகிறது. இந்தக் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
'பத்து கல்லூரிகள் திறக்கப்படும்'
சென்னை: திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன் சத்திரம், மானூர், தாராபுரம், ஏரியூர், ஆலங்குடி, சேர்க்காடு, கூத்தாநல்லூர் ஆகிய 10 இடங்களில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுவதாக சட்டப்பேரவை யில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழக மக்களுக்கு தரமான அரிசி
சென்னை: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் தரமான அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

