கேரளாவிலிருந்து தமிழகம் வருவோரிடம் பரிசோதனை மா.சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன்: இருமுறை தடுப்பூசி போட்டவர்களுக்கு விலக்கு

கேரளாவிலிருந்து தமிழகம் வருவோரிடம் பரிசோதனை மா.சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன்: இருமுறை தடுப்பூசி போட்டவர்களுக்கு விலக்கு

2 mins read
9af900cb-0263-4c15-af4d-da21357bb7fc
கிருமிப் பரவலைத் தடுக்க தமிழக-கேரள மாநில எல்லையில் கேரள வாகனப் பயணிகளைப் போலிசார் சோதிக்கின்றனர். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா இரண்­டாம் அலை­யின் தாக்­கம் ஒரு கட்­டுக்­குள் வந்­தா­லும் பக்­கத்து மாநி­ல­மான கேர­ளா­வில் இப்­பா­திப்பு அதி­க­ரித்து வரு­வது பெரும் மிரட்­டலை ஏற்­ப­டுத்தி உள்ளது.

இதை மன­தில்­கொண்டு, "கேர­ளா­வில் இருந்து தமிழ்­நாடு வரு­ப­வர்­க­ளுக்கு தமி­ழக-கேரள எல்­லைப் பகு­தி­களில் கொரோனா பரி­சோ­தனை கட்­டா­ய­மாக செய்­யப்படு­கிறது.

"இந்­தப் பரி­சோ­த­னையைச் செய்து­கொள்ள விரும்­பா­த­வர்­கள் தாங்­கள் இரு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தற்­கான சான்­றி­தழைக் காண்­பிக்க வேண்­டும்," என்று மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­யுள்­ளார்.

சென்னை போரூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அமைச்­சர் நேற்று பேசி­ய­போது, "கேர­ளா­வில் இருந்து விமா­னம், கடல், ரயில், சாலை மார்க்­க­மாக வரும் அைனத்து பயணி­களும் 'கொரோனா தொற்­றில்லை' என்­ப­தற்­கான சான்­றி­தழை வைத்­தி­ருக்க வேண்­டும். இச்­சான்­றி­தழை அவர்­கள் தங்­க­ளது பய­ணத்தை தொடங்­கு­வ­தற்கு 72 மணி நேரத்­துக்கு முன்­பாக எடுத்­தி­ருக்க வேண்­டும். அல்­லது தடுப்­பூசி இரு­முறை போட்­டுக்கொண்­ட­தற்­கான சான்­றி­தழைக் காண்­பிக்க வேண்­டும்," என்­றார்.

மக்­கள் ஒத்­து­ழைத்­தால் மட்­டுமே கொரோனா பர­வலைத் தடுக்க முடி­யும் என­வும் தமி­ழ­கத்­தில் இது­வரை 2 கோடியே 87 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, "தமி­ழ­க மக்கள் அடுத்த 10 நாள்­க­ளுக்கு மிகுந்த கவ­னத்­து­டன் இருக்­க­வேண்­டும் என்­றும் கேர­ளா­வில் இருந்து வரு­ ப­வர்­கள் 'கொரோனா பாதிப்­பில்லை' சான்­றி­த­ழைக் கட்­டா­யம் வைத்­தி­ருக்க வேண்­டும் என்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை முதன்­மைச் செய­லா­ளர் டாக்­டர் ஜெ.ராதா­ கிருஷ்­ண­னும் வலி­யு­றுத்­தி­ உள்ளார்.

"கேர­ளத்தை ஒட்­டி­யுள்ள தமி­ழக மாவட்­டங்­களில் மருத்­து­வப் பரிசோதனையைத் தீவி­ரப்­ப­டுத்­தும்­படி­யும் எல்­லை­யோர மாவட்­டங்­களில் வசிக்­கும் மக்­க­ளுக்கு 100% தடுப்­பூசி போட­வும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன," என்­றும் அவர் கூறி­னார்.