உணவகங்களில் கையுறையை கட்டாயமாக்க உத்தரவு

உணவகங்களில் கையுறையை கட்டாயமாக்க உத்தரவு

1 mins read
a27f5d67-85fd-4b20-a65d-db86ca891225
-

சென்னை: பேக்­கரி போன்ற உண­வுப் பொருள் விற்­ப­னைக் கடை­களில் உள்­ள­வர்­கள் கையுறை பயன்­ப­டுத்­து­வ­தைக் கட்­டா­ய­மாக்க வேண்­டும் எனத் தமிழ்­நாடு அர­சுக்கு சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­தரவிட்­டுள்­ளது.

உண­வ­கங்­கள், பேக்­க­ரி­கள், மளி­கைக் கடை­களில் பொருட்­க­ளைப் பார்­சல் செய்து தரும்­போது அங்கு பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் தாள்­க­ளைப் பிரிக்க எச்­சி­லை­யும் நெகிழி பைகளைத் திறக்க ஊத­வும் செய்­கின்றனர்.

இதனால், கிருமிப் பர­வல் அதி­க­ரிக்­கும் அபா­யம் அதிகம் உள்­ள­தா­கக் கூறி திருச்­செந்­தூ­ரைச் சேர்ந்த வழக்­க­றி­ஞர் ராம்­கு­மார் ஆதித்­தன் என்பவர் வழக்­குத் தொடர்ந்­தி­ருந்­தார்.

இந்த வழக்கு உயர் நீதி­மன்றத் தலைமை நீதி­பதி சஞ்­சீவ் பானர்ஜி, நீதி­பதி ஆதி கேச­வலு அமர்­வில் விசாரணைக்கு வந்­த­போது, அரசுத் தரப்­பில் உண­வுப் பொருட்­களை கையாள்­ப­வர்­கள் எச்­சில் தொட்டு பயன்­ப­டுத்­தக் கூடாது என அரசாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

அப்­போது மனு­தா­ரர் தரப்­பில், இந்த அர­சாணை பிறப்­பிப்­பது மட்­டும் போதாது.

இதுகுறித்து போதிய அள­வில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என­வும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இதைத்தொடர்ந்து, உத்­த­ரவு பிறப்­பித்த நீதி­ப­தி­கள், உணவு வழங்­கல் பிரி­வில் உள்­ள­வர்­கள் கையுறைகளைப் பயன்­ப­டுத்­து­வ­தைக் கட்­டா­ய­மாக்க வேண்­டும் என்­றும் பொது­மக்­க­ளின் ஆரோக்­கி­யத்­தில் எவ்­வித சம­ர­ச­மும் செய்து கொள்­ளக்­கூடாது என்­றும் அறி­வு­றுத்­தி­னர்.