சென்னை: இரு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் தம் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததுடன் கட்சிப் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
கே.டி.ராகவனின் பாலியல் காெணாளியை அதே கட்சியைச் சேர்ந்த யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
பாஜகவினர் தங்களது அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காகவே இந்தக் காணொளியைத் தான் வெளியிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
அத்துடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் ேக.டி.ராகவனின் காணொளி வெளியிடப்பட்டதாகவும் அதற்கான ஆதாரமாக 'வாட்ஸ் அப்' உரையாடல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையே, கே.டி.ராகவன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மறுபுறம் மதன் ரவிச்சந்திரன், வெண்பா இருவரும் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர்.
காணொளி வெளியிட்டதில் மதனுக்கு ஏதும் உள்நோக்கம் இருக்குமோ? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வாயிலாக சந்தேகம் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை தங்களுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் "நமது கட்சிக்காரப் பெண்ணுக்கு நீதி தேவை. காெணாளியை வெளியிடுங்கள்," என்று அண்ணாமலைதான் கூறியதாகவும் மதன் ரவிச்சந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

