'சதி' பழக்கத்தைக் குறிக்கும் இரு கற்சிற்பம் கண்டுபிடிப்பு

'சதி' பழக்கத்தைக் குறிக்கும் இரு கற்சிற்பம் கண்டுபிடிப்பு

1 mins read
b5c97b56-b4eb-40b8-95ce-37fdd849876d
'சதி' உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் உயிர்­விட்ட தம்­பதி­யின் நினைவை போற்­றும் வகை­யில் அவர்­க­ளின் உரு­வங்­களை ஒரு கல்­லில் சிற்­ப­மாக செதுக்கி, பூஜை செய்து வழி­பட்டு வந்துள்ளனர். வீர­னின் கொண்டை நேரா­க­வும் அவ­ரது மனைவியின் கொண்டை இட­து­பக்­க­மாக சாய்ந்த நிலை­யி­லும் அணிமணிகளுடன் காட்சி தருகின்றனர். படம்: ஊடகம் -

வாலா­ஜா­பாத்: வாலா­ஜா­பாத் அருகே 'சதி' என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தைக் குறிக்­கும் வகை­யிலான 14, 15ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த இரு கற்­சிற்­பங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

காஞ்சி­பு­ரம் மாவட்­டம், வாலாஜா பாத்­தில் அமைந்­துள்­ளது ஊத்­துக்­காடு கிரா­மம்.

இங்கிருந்து கட்­ட­வாக்­கம் செல்­லும் சாலை­யோ­ரம் இருந்த கற்­களை உத்­தி­ர­மே­ரூர் வர­லாற்று ஆய்வு மையத் ­த­லை­வர் கொற்­றவை ஆத­வன் தனது குழு­வி­ன­ரு­டன் கள ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், 14, 15ஆம் நூற்­றாண்டைச் சேர்ந்த ஒரு வீரன், தனது இனத்தைச் சேர்ந்த மக்களை அல்லது ஊரை அல்லது நாட்டைக் காக்கும் பணியில் போர் புரிந்து வீர­ம­ர­ணம் அடைந்­தால் அந்த வீர­னின் உட­லுக்கு சடங்­கு­கள் செய்து, தீ மூட்டி, அந்த தீயில் வீர­னின் மனை­வி­யும் உடன்­கட்டை ஏறி உயிரை விட்டுவிடு­வார். இந்தச் செயலுக்கு 'சதி' என்று பெயர்.

இந்த 'சதி' நிகழ்­வில் உயிர்­விட்ட தம்­ப­தி­யின் நினைவை போற்­றும் வகை­யில் அவர்­க­ளின் உரு­வங்­களை ஒரு கல்­லில் சிற்­ப­மாகச் செதுக்கி அக்கல்லை நட்டு வைத்து பூஜை செய்து வழி­பாடு நடத்து­வர்.

ஊத்­துக்­காட்டில் கண்­டெ­டுக்­கப்­பட்ட இந்தக் கற்­சிற்­பம் 1½ அடி உய­ர­மும் 1 அடி அக­ல­மும் கொண்­ட­தாக உள்­ளது. இதன் அரு­கி­லேயே இருந்த மற்­றொரு கல்­லா­னது 15ஆம் நூற்­றாண்டை சேர்ந்­தது என்­ப­தும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.