முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வலியுறுத்து ஜெயலலிதா மரணத்துக்கான மர்மத்தை அவிழ்க்க கோரிக்கை

முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வலியுறுத்து ஜெயலலிதா மரணத்துக்கான மர்மத்தை அவிழ்க்க கோரிக்கை

2 mins read
7a042fe9-3807-4ea1-8996-b24338f18145
-

சென்னை: மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் மர­ணத்­தில் உள்ள சந்­தே­கங்­கள், குழப்­பங்­கள் உள்­ளிட்ட மர்ம முடிச்­சு­களை அவிழ்ப்­ப­தற்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் துரி­த­மாக நட­வடிக்கை எடுக்­க­வேண்­டும் என அதி­முக முன்­னாள் எம்.பி., மைத்­ரேயன் கோரியுள்­ளார்.

அண்­மை­யில் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் அறிக்­கை­யில், "ஜெய­ல­லிதாவின் மர­ணம் குறித்து கழக ஆட்­சி­யில் முறை­யாக விசாரிக்கப்பட்டு, தவறு இழைத்­த­வர்கள் எவ­ரா­யி­னும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள்," என்று வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்டது.

இந்­நிலை­யில், மைத்­ரே­யன் தனது ஃபேஸ்புக் பக்­கப் பதி­வில், "அஇ­அ­தி­மு­க­வின் ஒன்­றரை கோடி தொண்­டர்­க­ளைப் பொறுத்தவரை புரட்­சித் தலைவி ஜெய­ல­லிதா அம்மா இத­ய­தெய்­வ­மாக மட்­டு­மின்றி குல­தெய்­வ­மா­க­வும் வணங்­கப்­ப­டு­கி­றார். நான் ஜெயலலிதா நிழலில் மட்டுமே வளர்ந்தவன்.

"2016 செப்­டம்­பர் 22ஆம் தேதி ஜெயலலிதா உடல்­ந­லம் குன்றி அப்­போலோ மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­போது, விரை­வில் அவர் தேறி­வி­டு­வார் என்றுதான் நாங்­கள் நம்­பி­னோம்.

"ஆனால், டிசம்­பர் 5ல் அவ­ரது திடீர் மர­ணம் அதிர்ச்சி அளித்­தது.

"2017 பிப்­ர­வரியில் ஜெய லலிதாவின் மர­ணத்­தில் உள்ள மர்ம முடிச்­சு­கள் அவிழ்க்­கப்­பட வேண்­டும் என்­பது ஓ. பன்னீர்செல்வத்தின் முக்­கிய முழக்­க­மாக இருந்­தது.

"இதைத்தொடர்ந்து, எனது தலை­மை­யில் 12 உறுப்­பி­னர்­கள் அன்­றைய அதி­பர் பிர­ணாப் முகர்­ஜியைச் சந்­தித்து ஜெயலலிதாவின் மர­ணம் குறித்து சிபிஐ விசா­ரணை வேண்­டும் என கோரிக்கை மனு அளித்­தோம்.

"அதை­ய­டுத்து, 2017 செப்­டம்­பரில் நீதி­ய­ர­சர் ஆறு­மு­க­சாமி தலை­மை­யில் விசா­ரணை ஆணை யம் அமைக்­கப்­பட்­டது.

"90% விசா­ரணை முடி­வுற்ற நிலை­யில், 2019 ஏப்­ர­லில் அப்­போலோ மருத்­து­வ­மனை உச்ச நீதி­மன்­றத்­தில் விசாரணை ஆணை­யத்­திற்கு எதி­ராக தடையாணை பெற்­றது.

"இந்நிலையில், கடந்த ஈராண்­டுக­ளாக விசாரணை ஏதுமில்லை. கோடிக்­க­ணக்­கிலான அர­சுப்­ப­ணம் செலவானதுதான் மிச்­சம்.

"முதல்­வர் இப்பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, உச்ச நீதி­மன்­றத்­தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும் ஆறு­மு­க­சாமி ஆணைய அறிக்­கையை சமர்ப்­பிக்­கச் செய்து அதன்மூலம் ஜெய­ல­லிதாவின் மர­ணத்­தில் உள்ள சந்­தே­கத்தை தீர்த்துவைக்­க­வும் நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும். முதல்வர் இதை நிச்­ச­யம் செய்­வார் என நம்­பு­கி­றேன்," என்று மைத்­ரே­யன் தெரிவித்துள்ளதாக ஒன்இந்தியா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்ற முடிவு தெரியவந்தால் தான் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சியுடன் நிம்மதிப் பெருமூச்சு விடுவான்.