கோடநாடு வழக்கு 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

1 mins read
9a83c99a-3cdc-4060-9111-0592bc51f70a
-

மதுரை: கோட­நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா­ர­ணையை செப்­டம்­பர் 2ஆம் தேதிக்கு நீதி­மன்­றம் ஒத்­தி­வைத்து நேற்று உத்­த­ர­விட்­டது.

அன்­றைய தினம், வழக்­கில் சாட்­சி­க­ளா­கக் கரு­தப்­படும் கோட­நாடு எஸ்­டேட் மேலா­ளர், தட­ய­வி­யல் நிபு­ணர், மின்­வா­ரிய அதி­காரி மூவ­ரும் நேரில் முன்­னி­லை­யாக உத்­த­ர­விட்­டுள்ள நீதி­பதி, அவர்­க­ளி­டம் தொடர்ந்து மூன்று நாட்­க­ளுக்கு விசா­ரணை நடை­பெ­றும் என்றும் தெரி­வித்­துள்­ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசா­ரணை உத­கை­யில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்­றத்­தில் நீதி­பதி சஞ்­சய் பாபா அமர்வு முன்பு நடை­பெற்று வரு­கிறது.

குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­களில் முக்­கிய குற்­ற­வா­ளி­யான சயான் மட்­டுமே நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார்.

அர­சுத் தரப்­பில் வழக்­க­றி­ஞர்­கள் ஷாஜ­கான், கன­க­ராஜ் முன்­னி­லை­யா­கி­னர்.

இந்த வழக்கு தொடர்­பில் மேலும் ஒரு­சில முக்­கிய நபர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­பட உள்­ள­தால் சயான், ஜெய­ல­லி­தா­வின் கார் ஓட்­டு­ந­ராக இருந்­த­வ­ரும் வாகன விபத்­தில் மர்­ம­மான முறை­யில் உயி­ரி­ழந்­த­வரு­மான கன­க­ரா­ஜின் அண்­ணன் தன­பா­லி­ட­மும் நடத்­தப்­பட்ட விசா­ரணை அறிக்­கையை காவல்­துறை தாக்­கல் செய்­ய­வில்லை.