முன்னாள் முதல்வருக்கு விட்டுத் தந்த இந்நாள் முதல்வர்

முன்னாள் முதல்வருக்கு விட்டுத் தந்த இந்நாள் முதல்வர்

1 mins read
5b0dce85-99d3-4752-ba55-0bdb65a9e0b9
-

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா புத்தகப் பைகளில் இடம்பெற்றுள்ள முன்னாள் அதிமுக முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம், அப்படியே விட்டுவிடவும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறிய தாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், புத்தகப் பைகளில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை மாற்றுவதற்கு ரூ.13 கோடி செலவாகும் என முதல்வரிடம் தாம் கூறிய நிலையில், அதற்கு மறுத்து விட்ட முதல்வர் அந்தத் தொகையை வேறு பயனுள்ள திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என அறிவுறுத்தியதாகவும் மேலும் தெரிவித்தார்.