ரூ.10 லட்சம் வழிப்பறி செய்த போலிஸ் அதிகாரி கைது

மதுரை: சிவ­கங்கை மாவட்­டம் இளை­யான்­கு­டி­யைச் சேர்ந்த அர்­ஷத் என்­ப­வர் சொந்­தத் தொழில் செய்ய ரூ.10 லட்­சம் கடன் வாங்­கி­ இ­ருந்­தார்.

மேலும் பணம் தேவைப்­பட்­ட­தால் மதுரை அருகே நாக­மலை புதுக்­கோட்டை சென்று அங்கு பாண்டி என்­ப­வ­ரி­டம் கடன் கேட்­டுள்­ளார். பணத்­து­டன் வரு­வ­தாக பாண்டி சொல்­லி­விட்­டுச் சென்­ற­தால் சாலை ஓரம் அர்­ஷத் காத்­தி­ருந்­தார்.

அப்­போது நாக­மலை புதுக்­கோட்டை காவல்­துறை ஆய்­வா­ளர் வசந்தி அப்­ப­கு­திக்கு சென்று அர்­ஷத்­தி­டம் விசா­ரணை நடத்­தி­னார். அவர் வைத்­தி­ருந்த ரூ.10 லட்­சத்­தைப் பறி­மு­தல் செய்­தார். இது தொடர்­பாக மதுரை மாவட்ட காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் பாஸ்­க­ர­னி­டம் அர்­ஷத் புகார் அளித்­தார்.

அத­னைத் தொடர்ந்து வசந்தி தற்­கா­லிக நீக்­கம் செய்­யப்­பட்­டார். தமக்கு, முன்நிபந்­தனை வேண்­டும் என வசந்தி மதுரை உயர் நீதி­மன்­றக் கிளை­யில் மனு செய்­தார். அந்த மனுவை தள்­ளு­படி செய்த நீதி­பதி, வசந்­தியை கைது செய்ய உத்­த­ர­விட்­டார்.

அத­னைத் தொடர்ந்து நீல­கிரி மாவட்ட கோத்­த­கி­ரி­யில் பதுங்கி இருந்த வசந்­தியை தனிப்­படை போலி­சார் கைது செய்­த­னர். இவரை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!