இலங்கைத் தமிழர் வாழ பல கோடி ரூபாய் திட்டங்கள்

2 mins read
6616c950-3c50-4789-9440-db5edb7b4e20
-

சென்னை: சட்­ட­ச­பை­யில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின், முகாம் வாழ் இலங்கை தமி­ழர்­கள் நலன் தொடர்­பாக பேரவை விதி 110ன் கீழ் அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்டு பேசி­னார். அப்­போது அவர் கூறுகை யில், "1983ஆம் ஆண்டு முதல் இது­வரை 3 லட்­சத்து 4 ஆயி­ரத்து 269 இலங்­கைத் தமி­ழர்­கள் அக­தி­க­ளாக தமிழ்­நாட்­டிற்கு வந்­துள்­ள­னர்.

இவர்­களில், 18,944 குடும்­பங்­க­ளைச் சார்ந்த 58,822 பேர் 29 மாவட்­டங்­களில் அமைந்­துள்ள 108 முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்டு உள்­ள­னர். பொறி­யி­யல் பயில­ தேர்ச்சி பெற்ற இலங்கைத் தமிழ் மாண­வர்­களில் மதிப்­பெண் அடிப்­ப­டை­யில், முதல் 50 மாண­வர்­க­ளுக்கான கல்வி, மற்­றும் விடுதி கட்­ட­ணங்களை அரசே ஏற்­கும். முது­நிலை பட்­டப்­ப­டிப்பு பயி­லும் அனைத்து முகாம்­வாழ் மாண­வர்­க­ளை­யும் ஊக்­கு­விக்­கும் வகை­யில், அவர்­க­ளின் கல்வி, விடுதி கட்­ட­ணங்­களை அரசே ஏற்­றுக்­கொள்­ளும். இதற்­காக ஆண்­டு­தோ­றும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­படும்.

ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் விலை­யில்லா எரிவாயு இணைப்பு மற்­றும் இல­வச அடுப்பு வழங்­கப்­படும். இதற்­காக அர­சிற்கு ஒரு முறை 7 கோடி ரூபாய் செல­வி­னம் ஏற்­படும். அதைத்­த­விர, குடும்­பத்­திற்கு 5 எரிவாயு சிலிண்­ட­ருக்கு தலா 400 ரூபாய் வீதம் மானி­யத்­தொகை வழங்­கப்­படும். இதற்­காக 3 கோடியே 80 லட்­சம் ரூபாய் ஆண்­டு­தோ­றும் ஒதுக்­கீடு செய்­யப்­படும்.

"முகாம் வாழ் இலங்கை தமி­ழர்­க­ளுக்கு ரேஷ­னில் தற்­போது 20 கிலோ­விற்கு மேல் வழங்­கப்­படும் அரி­சிக்கு கிலோ ஒன்­றிற்கு 57 பைசா வீதம் மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. இதனை இனி ரத்து செய்து, அவர்­கள் பெறும் முழு அரிசி அள­வும் விலை­யில்­லா­மல் வழங்­கப்­படும். இதற்­கான செல­வுத் தொகை­யான 19 லட்­சம் ரூபா­யை­யும் அரசே ஏற்­றுக்­கொள்­ளும்," என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.