சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேராசி
ரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலை கல்லூரியில் தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி துவக்கி வைத்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுமான தொழிலாளர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக துவக்கி வைத்து வருகிறார்.
"சென்னை மாவட்டத்தில் 90.11 விழுக்காட்டு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள 112 கல்லூரி
களுக்கும் நேரில் சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வரும் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கும்," என்று கூறினார்.


