34 ஆண்டுக்குப் பிறகு மறுபிறவி
கோவை: கோவை மாவட்ட காவல்துறை அலுவலர்கள் பயன் படுத்தி வந்த ஹிந்துஸ்தான் பெட்ஃபோர்ட் வாகனம் 1987ஆம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கி உருக்குலைந்தது. முப்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் ஓரங்கட்டப் பட்டிருந்த வாகனத்தை புதுப்பிக்க அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டனர். கடந்த மூன்று மாதங்களாக இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இறுதியில் புத்தம்புது வாகனம்போல அது உருமாறிவிட்டது.
ரூ.1 கோடி கடத்தல் தங்கம்
திருச்சி: சார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்த னர். அப்போது மூவர் மீது சந்தேகம் எழுந்ததால் அவர்க ளிடம் சோதனை நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது உடைமைகளை சோதனை செய்ததில் 1.5 கிலோ தங்கத்தை மின்னியல் பொருள் களுக்குள் மறைத்து வைத்து கடத்திவந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.73 லட்சம். அதே போல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் தாவுத் என்பவர் ஆசனவாயில் 575 கிராம் தங்கத்தை மறைத்து வைத்தி ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.29.5 லட்சம் ஆகும். இருவர் மீதும் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்தனர். ஒரேநாளில் விமானத்தில் ரூ.1.02 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புகழ்ந்தால் நடவடிக்கை: ஸ்டாலின்
சென்னை: திமுக எம்எல்ஏ அய்யப்பன் நேற்று சட்டமன்றத் தில் நீண்ட நேரம் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை புகழ்ந்து பேசினார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், "புகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். அதனைக் கேட்காமல் தொடர்ந்து புகழ்ந்து பேசும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். அதன் பிறகும் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிவிட்டு அய்யப்பன் அமர்ந்தார்.

