கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்

கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்

1 mins read
cbfcb16f-aca5-433f-aefb-0a13ba4895c6
-

சென்னை: கல்­லூ­ரிக்கு வரும் மாண­வர்­கள் அனை­வ­ரும் முதல் தவணை தடுப்­பூ­சி­­யா­வது கட்­டா­ய­மா­கப் போட்­டி­ருக்கவேண்­டும் என உயர் கல்­வித் துறை அமைச்­சர் பொன்­முடி வலி­யு­றுத்தி உள்­ளார்.

தமி­ழ­கத்­தில் செப்­டம்­பர் 1ஆம் தேதி முதல் பள்­ளி­கள், கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட உள்­ளன. இதற்­கான வழி­காட்டி நெறி­மு­றை­களை தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், 18 வய­திற்கு மேற்­பட்ட மாண­வர்­க­ளுக்கு நேற்று முதல் செப்­டம்­பர் 1ஆம் தேதிக்­குள் தடுப்­பூசி போட­வேண்­டும் என பொது சுகா­தா­ரத்­துறை இயக்­கு­ந­ர­கம் வலியுறுத்திக் கூறி­யுள்­ளது.

மாண­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்கொண்டதை உறு­தி­செய்து கொள்ள வேண்­டும் என மாவட்ட சுகா­தா­ரத் ­து­றை­யும் அறி­வு­றுத்தி உள்­ளது.

இந்நிலையில், "சென்­னை­யில் 112 அரசு, தனி­யார் கல்­லுா­ரி­களில் மாண­வர்­க­ளுக்­கான கொரோனா தடுப்­பூசி முகா­மைத் துவக்கி உள்­ளோம். மருத்­து­வத் துறையின் உத­வி­யுடன் மாநி­லம் முழு­வ­தும் உள்ள அனைத்துக் கல்­லுா­ரி­க­ளி­லும் தடுப்­பூசி போடும் திட்­டத்தை விரி­வு­படுத்த உள்­ளோம்.

"செப்­டம்­பர் 1ல் கல்­லுா­ரி­கள் திறக்­கப்­ப­டும்­போது, மாண­வர்­கள் தடுப்­பூசி போட்­டி­ருந்­தால்­தான் வகுப்­புக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்," என்று பொன்­முடி கூறியுள்ளார்.