திருப்பத்தூர்: உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப் பாதை கேட்டு மறியல் செய்த பொதுமக்களிடம் தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு ஊராட்சி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கலா என்ற முதியவர் இறந்துவிட்டார்.
சுடுகாட்டுக்கு அவரது உடலைக் கொண்டு செல்லும்போது, ஒரு சிலர் வழியை மறைத்துக்கொண்டு, அது தனி நபருக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கிருஷ்ணா நகர் பகுதிவாசிகள் திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
குரிசிலாப்பட்டு போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்த போது, சிறப்பு உதவி ஆய்வாளர் நாசி என்பவர் மறியலில் ஈடுபட்டி ருந்த மக்களிடம், "முன்பெல்லாம் உடல்களை எப்படி எடுத்துச் சென்றீர்களோ, அதே முறையை இப்போதும் பின்பற்றி எடுத்துச் செல்லுங்கள்.
"மறியலில் ஈடுபட்டால் நடப்பதே வேறு. நான் உங்களை ஒரு வழி செய்துவிடுவேன்," என்று மிரட்டல் விடுத்தார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இந்நிலையில், நாசி மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர்.

