டாக்டர் ராதாகிருஷ்ணன்: தலைநகரில் மூன்று நாள்களில் அமையும் 'ஜீனோம்' ஆய்வகம் டெல்டா தொற்றால் 80% பேர் பாதிப்பு

டாக்டர் ராதாகிருஷ்ணன்: தலைநகரில் மூன்று நாள்களில் அமையும் 'ஜீனோம்' ஆய்வகம் டெல்டா தொற்றால் 80% பேர் பாதிப்பு

2 mins read
2e582521-40f3-49c2-a5d4-98c570f7b330
செய்தியாளர்களிடம் பேசும் டாக்டர் ராதாகிருஷ்ணன் (வலம்). படம்: ஊடகம் -

சென்னை: தமிழ்­நாட்­டில் இருந்து மர­பணுச் சோத­னைக்கு அனுப்­பப் பட்­டி­ருந்த மாதி­ரி­களில் 80% பேர் டெல்டா வகை கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறைச் செய­லா­ளர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இந்த அள­வுக்குத் தொற்று அதி ­க­ரித்­தி­ருப்­பது குறித்து பொது­மக்­கள் பயம் கொள்­ளத் தேவையில்லை. இந்த டெல்டா உள்­ளிட்ட அனைத்து வகை தொற்­றுக்­கும் ஒரே மாதி­ரி­யான சிகிச்சையே மருத்­து­வ­ம­னை­களில் அளிக்­கப்­படு­கிறது.

தேவை­யின்றி கடை­கள், சந்­தை­கள் உள்ளிட்ட இடங்களில் கூட்­டம் கூடு­வ­தை­யும் உண­வ­கங்­களில் பலரும் ஒன்­றா­கச் சேர்ந்து அமர்ந்து சாப்­பி­டு­வ­தை­யும் பொது­மக்­கள் தவிர்க்­க­வேண்­டும்.

இவை­தான் கிருமிப் பர­வல் அதி­க­ரிப்புக்கு முக்­கிய காரண மாகின்­றன என்று டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் மேலும் கூறி­யதாக 'நியூஸ் 18' ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சென்னை நந்­த­னம் அரசு கலைக் ­கல்­லூ­ரி­யில் மாண­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி சிறப்பு முகாம் நடை­பெற்று வரு­கிறது.

இதில் பங்­கேற்ற ராதா­கி­ருஷ்­ணன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறு­கை­யில், "கொரோனா மர­பி­யல் மாற்­றங்­கள் குறித்து சென்னையில் அமைய உள்ள 'ஜீனோம்' ஆய்­வ­கத்­தில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. அடுத்த மூன்று நாள்­களில் சோதனை முயற்­சி­யாக இந்த ஆய்­வ­கம் செயல்­பட உள்­ளது," என்றார்.

தொடர்ந்து பேசி­ய­வர், "தமி­ழ­கத்­தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் முதல் இப்­போ­து­வரை 3,417 மாதி­ரி­கள் மர­பணுச் சோத­னைக்­காக அனுப்­பப்­பட்­டுள்­ளன. அவற்­றில் 2,633 மாதி­ரி­க­ளின் முடி­வு­கள் வந்­துள்­ளன. இந்த முடி­வு­களில் 80% அதா­வது 2,150 மாதி­ரி­களில் டெல்டா வகை தொற்று பாதிப்பும் 12 மாதி­ரி­களில் டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பும் இருப்பது உறு­தியாகி உள்ளது.

"இறு­தி­யாக வந்து சேர்ந்த 222 மாதி­ரி­கள் அனைத்­துமே டெல்டா வகை­யைச் சேர்ந்­த­வை­தான். அண்­மை­யில் கண்­ட­றி­யப்­பட்ட அனைத்து குழு­மங்­க­ளி­லும் இந்த டெல்டா வகை பாதிப்புதான் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளது," என்று சொன்னார்.