'தொழில்நுட்பக் கோளாற்றால் மேம்பால விபத்து நடந்துள்ளது'

'தொழில்நுட்பக் கோளாற்றால் மேம்பால விபத்து நடந்துள்ளது'

1 mins read
9bca3675-12d4-47f7-a24a-a323130af8fd
இடிந்து விழுந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி. படம்: ஊடகம் -
Google News Preferred Icon

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள நத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக் குள்ளானது.

இந்த விபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங், 45, என்ற தொழிலாளி உயிரிழந்த தாகக் கூறப்படுகிறது.

பலத்த காயம் அடைந்த மற்­றொரு தொழி­லாளிக்கு ராஜாஜி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், "விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. விசா ரணை முடிவடையும் வரை கட்டு மானப் பணி நிறுத்தப்படுகிறது,'' என்று கூறினார்.

இந்நிலையில், மேம்பாலப் பணி களை மேற்கொள்ளும் நிறுவனத் தின் பொறுப்பாளர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பாலம் இடிந்து விழவில்லை. ஹைட்ராலிக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.

"பாலத்தைத் தூக்கி வைக்கும் மிகப்பெரிய பணியில் இரு ஊழி யர்கள் மட்டுமே ஈடுபட்டது சந்தே கத்தை எழுப்புவதாக உள்ளது. இது குறித்து ஒப்பந்ததாரரிடம் விசா ரணை நடத்தப்படும்," என்று கூறியதாக ஒன் இந்தியா ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.