சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ளது காஞ்சிரங்கால் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்து வருகின்றனர். இவர்களைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
வானொலியில் 'மனதின் குரல்' என்ற மாதாந்திர நிகழ்ச்சியில் ேநற்று பேசிய பிரதமர், காஞ்சிரங்கால் கிராம மக்களின் உதவியுடன் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவ தாக பிரதமர் தெரிவித்தார். தங்களது தேவைகளைத் தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்வதன் மூலம் காஞ்சிரங்கால் மக்கள் நாட்டுக்கே முன்னு தாரணமாகத் திகழ்வதாகவும் பிரதமர் பாராட்டி உள்ளார்.

