'விக்ரஹா' சுற்றுக்காவல் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

'விக்ரஹா' சுற்றுக்காவல் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

1 mins read
33860148-9c6f-4833-a146-b894d3d643a2
-

சென்னை: சென்­னை­யில் உள்ள 'எல் அண்ட் டி' கப்­பல் கட்­டும் தொழிற்­சாலை, 'விக்­ரஹா' என்ற ஏழா­வது சுற்­றுக் காவல் கப்­பலை தயா­ரித்­துள்­ளது.

ரூ.188 கோடி மதிப்­பீட்­டில் உள்­நாட்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டுள்ள இப்­பு­திய கப்­பலை நாட்­டுக்கு அர்ப்­ப­ணிக்­கும் விழா சென்னை துறை­மு­கத்­தில் நடைபெற்­றது.

நிகழ்­வில் கலந்­து­கொண்ட மத்­திய பாது­காப்­புத் துறை அமைச் சர் ராஜ்­நாத்­சிங், கப்­பல் பய­ணத்­தைத் தொடங்­கி­வைத்­தார்.

இந்­திய கட­லோ­ரக் காவல் படைக்­காக 'எல் அண்ட் டி' நிறு­வ­னத்­தி­டம் இருந்து ஏழு சுற்­றுக்­காவல் கப்­பல்­களை வாங்க கடந்த 2015ல் பாது­காப்­புத் துறை ஒப்­பந்­தம் செய்­தது.

இதன்­படி, ஏற்­கெ­னவே 'விக்­ரம்', 'விஜயா' 'வீரா', 'வராஹா', 'வரத்', 'வஜ்ரா' ஆகிய ஆறு சுற்­றுக்­கா­வல் கப்­பல்­கள் பாது­காப்­புப் படை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், ஏழா­வ­தாக 'ஐசிஜி விக்­ரஹா' கட­லோ­ரக் காவல் படை­யி­டம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

கட­லோ­ரக் காவல் படை­யில் தற்­போது 20 ஆயி­ரத்­துக்­கும் மேற் பட்ட வீரர்­களும் 150 சுற்­றுக்­கா­வல் கப்­பல்­களும் 65 விமா­னங்­களும் உள்­ளன. இந்­தப் படை உரு­வாக்­கப்­பட்­டது முதல் கடந்த 40 ஆண்­டு­களில் கடல் பேரா­பத்­து­களைத் தடுப்­ப­தில் திற­மை­யு­டன் செயல்­பட்டு வரு­வ­தாக ராஜ்­நாத் சிங் கூறி­னார்.

98 மீட்டர் நீளம் உடைய விக்ரஹா சுற்றுக்காவல் கப்பலில் 11 அதிகாரிகள், 110 சிப்பந்திகள் இருப்பர். ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி, நான்கு அதிவிரைவுப் படகுகளைச் சுமந்து செல்லும் வசதியும் இக்கப்பலில் உள்ளது. படம்: ஏஎஃப்பி