உள்ளாட்சித் தேர்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிப்பு

1 mins read
6914e353-9210-478f-91da-0be23647c8e8
-

சென்னை: மாந­க­ராட்சி, நக­ராட்­சிப் பகு­தி­க­ளுக்­கான உள்­ளாட்­சித் தேர்­தல் தேதி­யைத் தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஒரு சில நாள்­களில் அறி­விப்­பார் என்று அமைச்­சர் நகர்ப்­புற வளர்ச்­சித் துறை அமைச்­சர் கே.என்.நேரு தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்­நாட்­டில் ஒன்­பது மாவட்­டங்­க­ளுக்­கான ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல் நடத்­தப்­ப­டா­மல் இருக்­கும் நிலை­யில், செப்­டம்­பர் 15ஆம் தேதிக்­குள் அதனை நடத்தி முடிக்க வேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து, தேர்­தலை நடத்­து­வ­தற்­கான பணி­களை முன்­னெடுக்­கு­மாறு மாநி­லத் தேர்­தல் ஆணை­யத்தை முதல்­வர் ஸ்டா­லின் கேட்­டுக்­கொண்­டார்.

இதைத் தொடர்ந்து, தேர்­தல் ஆணை­யம் கடந்த இரு மாதங்­களாக அதற்கான­ ப­ணி­களை மேற்­கொண்டு வந்­தது.

முன்­ன­தாக, அந்த ஒன்­பது மாவட்­டங்­களில் வாக்­கா­ளர் பட்டி­யலைத் தயா­ரிக்க தேர்­தல் ஆணை­யம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. நாளை 31ஆம் தேதிக்­குள் வாக்கா­ளர் பட்­டி­யல் வெளி­யிட வேண்­டும் என்­றும் அம்­மா­வட்ட நிர்­வா­கங்­கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், "மாந­க­ராட்சி, நக­ராட்­சிப் பகு­தி­களில் உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. தேர்­தலை எப்­போது நடத்­த­லாம் என்­பது குறித்து ஆலோ­சித்து வரு­கி­றோம். அடுத்த சில நாள்­களில் உள்­ளாட்­சித் தேர்­தல் தேதியை முதல்­வர் அறி­விப்­பார்," என்று அமைச்­சர் நேரு கூறி­னார்.

மாந­க­ராட்சி விரி­வாக்­கத்­தின்­போது அத­னு­டன் இணைக்­கப்­படும் கிரா­மப் பஞ்­சா­யத்­துக­ளின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­கள் தங்­கள் பத­விக்­கா­லம் முடி­யும்­வரை அப்­ப­த­வி­களில் நீடிப்­பார்­கள். அவர்­கள் அனை­வ­ரும் அந்­தந்த மாவட்ட ஆட்­சி­யர்­க­ளின் நேர­டிக் கண்­கா­ணிப்­பில் செயல்­படு­வார்­கள். மாந­க­ராட்­சி­யோடு இணைக்­கப்­படும் கிரா­மப் பஞ்­சா­யத்­துகள் நீங்­க­லாகத் தேர்­தல் நடத்­தப்­படும்.