இனி 'அகதிகள் முகாம்' இல்லை

இனி 'அகதிகள் முகாம்' இல்லை

1 mins read
495a2173-e5b1-483e-9560-ce7cb8846092
-
Google News Preferred Icon

சென்னை: இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

"இலங்கைத் தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்லர். நாம் அவர்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணர்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளது," என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

முன்னதாக, இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.317 கோடி ஒதுக்கீடு செய்வதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.