பத்திரிகை மன்றம் அமைக்க ஆணை

பத்திரிகை மன்றம் அமைக்க ஆணை

1 mins read
fc90629d-21ce-4d57-88f8-09b6fdbf14bd
-

சென்னை: அடுத்த மூன்று மாதங்களுக்குள் 'தமிழ்நாடு பத்திரிகை மன்றம்' அமைக்கப் பட வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அந்த மன்றத்தின் தலைவராகவும் அனுபவமிக்க பத்திரிகையாளர்களும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் அதன் உறுப்பினர்களாகவும் இருப்பர் என்று நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்து இருக்கிறது.