கள்ளக்குறிச்சி: சொந்த வீட்டிலேயே பணத்தைக் களவாடிய மகன்மீது பெற்ற தாயே போலிசில் புகார் அளித்த சம்பவம் கள்ளக் குறிச்சியில் நிகழ்ந்துள்ளது. சில நாள்களுக்குமுன் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு எழுந்தார் திருவாட்டி சாவித்திரி. வீட்டின் கூரை ஓடு பிரிக்கப்பட்டு இருந்ததைக் கண்டும் நிலைப் பேழையில் இருந்த 390,000 ரூபாய் மாயமானதையும் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பணம் களவுபோனது குறித்து அவர் போலிசில் புகார் அளித்தார். இந்நிலையில், சாவித்திரியின் 2வது மகன் ஆனந்தராஜ்மீது சந்தேகப்பட்ட போலிஸ், அவரை விசாரித்தது. அப்போது, பணத்தைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.
போலிசிடம் மகனை மாட்டிவிட்ட தாய்
1 mins read
-

