சென்னை: ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மாலை வேளையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.
அவர்களில் பலர் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியையும் கடைப்பிடிப்பதில்லை என்பது சுகாதார நிபுணர்களைக் கவலைப்பட வைத்துள்ளது.
இவ்வாறு பொறுப்பற்றும் அலட்சியமாகவும் செயல்பட்டால் தமிழகத்தில் மீண்டும் தொற்றுப் பாதிப்பு அதிகரித்துவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகளவு கூடும் பகுதிகள் பொதுப்பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், பூங்காக்களில் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் எந்நேரமும் இந்த இடங்களுக்குச் சென்று வர இயலும்.
தமிழகத்தில் செப்டம்பர் 6ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்த 23ஆம் தேதி முதல் மக்கள் அதிகம் கூடும் பல இடங்கள் திறக்கப்பட்டன.
எனினும் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமானோர் கடற்கரைகள், பூங்காக்களில் கூடுகிறார்கள். பெரும்பாலானோர் குழுவாக வந்து போவதுடன், முகக்கவசம்கூட அணிவதில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் மீண்டும் தொற்றுப்பரவல் அதிகரிக்கும் அபாயத்தை உணர்ந்து, அரசாங்கம் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதேபோல் சென்னையில் பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர் உள்பட இதர கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
முகக்கவசம் அணியாது, சமூக இடைவெளியின்றி அலட்சியம்

