சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டுச் சென்றார்.
நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அவர், துபாய் செல்வதாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அவர் நேற்று அதிகாலை நான்கு மணிக்கு அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாலை விமானத்தில் அவர் பயணம் மேற்கொள்ளவில்லை என்பது பின்னர் தெரியவந்தது.

