தமிழக அரசு: வரும் 15ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

தமிழக அரசு: வரும் 15ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

2 mins read
edd2014d-1eb7-4887-8096-a6aa18a87539
விநாயகர் சதுர்த்தி அன்றும் கட்டுப்பாடுகள் அறிவிப்புவரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கொண்டாடுவதற்கும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த திருநாள் சமயத்தில் விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைப்பதற்கு அனுமதி இல்லை. அதேபோல், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.படம்: தமிழக ஊடகம் -

சென்னை: மாண­வர்க­ளின் கல்வி, மன நல­னைக் கருத்­தில் கொண்டு இன்று முதல் பள்ளி, கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்டு, பாடங்­கள் நடத்­தப்­பட உள்­ள­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

பல மாதங்­க­ளாக பாடங்­கள் நடத்­தப்­ப­டா­த­தால் வாரத்­தில் ஆறு நாள்க­ளுக்கு பள்ளி, கல்­லூ­ரி­கள் செயல்­படும் என்­றும் 50% மாண­வர்­கள் மட்­டுமே வகுப்­ப­றைக்­குள் அனு­ம­திக்­கப்படு­வர் என்­றும் அரசு கூறியுள்ளது.

மாணவ, மாண­வி­ய­ருக்­கான அனைத்து அரசு விடு­தி­கள், தனியாா் கல்வி நிறு­வ­னங்­க­ளின் விடு­தி­கள் இயங்­க­வும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் மக்­கள் மத்­தி­யில் மேலும் அதி­க­ரித்­து­வி­டா­மல் தடுக்க, கூடு­தல் கட்­டுப்­பா­டு­களை தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது.

செப்­டம்­பர் 15ஆம் தேதி வரை இக்கட்­டுப்­பா­டு­கள் தொடர உள்­ள­தாகத் தெரி­வித்­துள்ள ­முதல்வர், இதுகுறித்த முக்­கிய அறி­விப்­பு­களை­யும் வெளி­யிட்­டுள்­ளார்.

"மக்­கள் கூட்டத்தைத் தவிா்க்­கும் வகை­யில், வரும் 5ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் அனைத்து கடற்­க­ரை­களும் மூடப்­படும்.

"வெள்ளி, சனி, ஞாயிற்­றுக்­கிழமைகளில் அனைத்து மத வழி­பாட்­டுத் தலங்­க­ளி­லும் பொது­மக்­கள் ­வழிபடத் தடை­ தொட­ரும்.

"கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­படுத்­தும் வகை­யில், அனைத்து மாவட்ட ஆட்­சி­யர்­களும் அந்­தந்த மாவட்டத் தின் சூழ்நிலைக்கேற்ப கட்­டுப்­பாடு­களை மேற்­கொள்­ள­லாம்.

"அனை­வ­ரும் முகக்கவ­சம் அணி­ந்து, சமூக இடை­வெளி­யை­யும் பின்­பற்றவேண்­டும்," என முதல் வர் அறிவுறுத்தியுள்ளதாக தினமணி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, பள்ளிகள் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றும் ­தயக்­க­மின்றி பிள்­ளை­களைப் பள்ளி ­க­ளுக்கு அனுப்­பு­மாறும் பெற்றோரை பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி கேட்டுக்கொண்டுள்ளார்.