மாமல்லபுரம்: இந்தியாவில் முதல் முறையாக கடற்கரை மல்யுத்தப் போட்டி சென்னையை அடுத்த மகாபலிபுர கடற்கரையில் நடந்தது.
ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் பலத்தை நிரூபிக்க கடற்கரை மணலில் மல்லுகட்டினர்.
தமிழகத்தில் மிக நீண்ட கடற்கரை இருப்பதால் முதல்முறையாக இப்போட்டியை மாமல்லபுரத்தில் அறிமுகப்படுத்தியதாக மல்யுத்த சங்கத் தலைவர் ரோக்டாஷ் சிங் கூறியுள்ளார்.
இந்திய விளையாட்டு அமைச்சின் அனுமதியுடன் கடந்த இரு நாட்களாக தேசிய அளவில் போட்டியை இந்திய கடற்கரை மல்யுத்த சங்கம் நடத்தி வந்தது. ஹரியானா மூன்று தங்கம், இரு வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்திலும் மகாராஷ்டிரா இரண்டு தங்கத்துடன் இரண்டாவது இடத்திலும் ராஜஸ்தான் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்திலும் போட்டியில் வெற்றிபெற்றன.

