கோவையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த ஆட்சியர் சமீரன்

கோவையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த ஆட்சியர் சமீரன்

1 mins read
f52f22d1-cc65-4fbd-8188-0aef4a165608
-

கோயம்­புத்­தூர்: தமி­ழ­கத்­தில் உள்ள கோவை மாவட்­டத்­தைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் கிருமி பாதிப்பு தணிந்து வரு­கிறது.

மாநி­லத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் கோவை­யில் 188 பேரும் சென்­னை­யில் 183 பேரும் ஈரோட்­டில் 129 பேரும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து, கோவை­யில் சற்று அதி­க­ரித்து வரும் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த அங்கு கூடு­தல் கட்­டுப்­பா­டு­களை இம்­மா­வட்ட ஆட்­சி­யர் சமீ­ரன் அறி­வித்­துள்­ளார்.

அதன்­படி, கோவை மாவட்­டத்­தில் உள்ள நகைக் கடை­கள், துணிக்­க­டை­கள், பேரங்காடிகள் மட்டுமின்றி பூங்­காக்­களும் சனி, ஞாயிறன்று மூடப்பட உள்ளன.

கோவை­யில் உள்ள அனைத்து உண­வ­கங்­களும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை 50% வாடிக்­கை­யா­ளர்­களுடன் செயல்படவும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை பார்­ச­லுக்கு மட்­டும் அனு­மதி என்றும் சமீரன் உத்தரவிட்டுள்­ளார்.

இன்றுமுதல் இந்தக் கட்­டுப்­பாடு­கள் நடப்புக்கு வரவுள்ளன.