கோயம்புத்தூர்: தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கிருமி பாதிப்பு தணிந்து வருகிறது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 188 பேரும் சென்னையில் 183 பேரும் ஈரோட்டில் 129 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து, கோவையில் சற்று அதிகரித்து வரும் தொற்றைக் கட்டுப்படுத்த அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளை இம்மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகள், துணிக்கடைகள், பேரங்காடிகள் மட்டுமின்றி பூங்காக்களும் சனி, ஞாயிறன்று மூடப்பட உள்ளன.
கோவையில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி என்றும் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இன்றுமுதல் இந்தக் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரவுள்ளன.

