உள்ளாட்சித் தேர்தல்: கையேடு வெளியீடு

உள்ளாட்சித் தேர்தல்: கையேடு வெளியீடு

2 mins read
120f7edf-f8ae-42e9-8d0a-17f4ccef5dbb
-

வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கக் கூடாது என அறிவிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் விடு­பட்டுப் போன வேலூர், ராணிப்­பேட்டை, திருப்­பத்­தூர் உள்­ளிட்ட ஒன்­பது மாவட்­டங்­களில் ஊரக உள்­ளாட்சி அமைப்புகளுக்­கான தேர்­தலை நடத்­தும் பணி­களில் மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் தீவி­ரம் காட்டி வரு­கிறது.

இந்­நி­லை­யில், இப்­போது வேட்­பா­ளர்­கள் பின்­பற்­ற­வேண்­டிய வழி­மு­றை­கள் குறித்த கையேட்டை மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் வெளி­யிட்­டுள்­ளது.

அதில், வேட்­பா­ளர்­கள் தங்க ளுக்கு வாக்கு சேக­ரிக்­கும்போது பரி­சுப் பொருட்­க­ளையோ, அதைச் செய்­வேன், இதைச் செய்­வேன் என்ற உறு­தி­மொழிகளையோ வாக்காளர்களிடம் அளிக்­கக்­கூடாது என குறிப்­பிட்­டுள்­ளது.

ஒரு­வர், எந்த ஊராட்சி மன்­றத்­தின் உறுப்­பி­ன­ராக அல்­லது தலை­வ­ராக போட்­டி­யிட விரும்பு கிறாரோ, அந்த ஊராட்சி மன்­றத்­தின் வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் அவ­ரது பெயர் விவ­ரம் இடம் பெற்­றி­ருக்கவேண்­டும்.

வேட்­பு­மனு தாக்­கல் செய்­யும் கடைசி நாளன்று 21 வயது நிறை வடைந்­த­வ­ராக இருக்­க­வேண்­டும். வேட்­பு­ம­னு­வைத் தாக்­கல் செய்­யும் பொது வேட்­பா­ளர் கிராம ஊராட்சி வார்டு உறுப்­பி­னர் தேர்­த­லுக்கு ரூ.200, ஊராட்­சித் தலை­வர், ஊராட்சி ஒன்­றிய வார்டு உறுப்­பி­னர் தேர்­த­லுக்கு தலா ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்­பி­னர் தேர்­த­லுக்கு ரூ.1,000 வைப்­புத் தொகை­யாக செலுத்த வேண்­டும்.

இந்­நி­லை­யில், ஒன்பது மாவட்ட ஊரக உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக் கான தேர்­தல் தேதி விரை­வில் அறிவிக்­கப்­பட உள்ள நிலை­யில், அந்­தந்த தேர்­தல் நடத்­தும் அலு­வ­லர்­கள் மூல­மாக வாக்­கா­ளர் பட்­டி­யல் வெளி­யி­டப்­ப­டு­வ­தாக மாநில தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது. அதில் தங்­கள் பெயர் ­இ­டம்­பெற்­றுள்­ளதா என பொது­மக்­கள் சரி­பார்த்­துக் கொள்­ள­வும் அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளதாக 'இந்து தமிழ் திசை' ஊட­கத் தக­வல் தெரி­வித்­துள்­ளது.

தமிழ்­நாட்­டில் செப்­டம்­பர் 15ஆம் தேதிக்­குள் இந்த தேர்­தலை நடத்தி முடிக்கவேண்­டும் என்று உச்ச நீதி­மன்­றம் உத்­த­ர­விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலூர், விழுப்­பு­ரத்­தில் வாக்­கா­ளர் பட்­டி­யல் வெளி­யீடு

விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் நடை­பெற உள்ள ஊரக உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான வாக்­கா­ளர் பட்­டி­யலை நேற்று இம்­மா­வட்ட வரு­வாய் அலு­வ­லர் ராஜ­சே­க­ரன் வெளி­யிட்­டார். விழுப்­பு­ரத்­தில் ஆகமொத்­தம் 13,83,687 வாக்­கா­ளர்­கள் உள்­ள­னர். அேதபோல், வேலூர் மாவட்­டத்­தில் வேலூர் ஆட்­சி­யர் குமா­ர­வேல் பாண்­டி­யன் வாக்­கா­ளர் பட்­டி­யலை வெளி­யிட்­டார். இங்­குள்ள 7 ஊராட்சி ஒன்­றி­யங்­களில் 7.16 லட்­சம் வாக்­கா­ளர்­கள் உள்­ள­னர்.