சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த பரங்கிப் ேபட்டை அருகே அதிவேகமாக சென்ற கார் ஒன்று மரத்தின் மீது மோதி, வீட்டின் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், 40. இவர், ஏற்கெனவே விபத்தில் சிக்கி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
மகேஷுடன் அவரது நண்பர் கள் அறிவழகன், ராஜமூர்த்தி, கார்த்திக், சதீஷ், சிவக்குமார் ஆகிய ஏழு பேரும் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மகேஷ் அதிவேகமாக காரை ஓட்டியதாகக் கூறப்படு கிறது. கார் கறி குப்பம் பகுதியில் சென்றபோது மரத்தின் மீது மோதி, திரைப்பட சண்டைக் காட்சியில் கார் பறப்பது போல ஒரு வீட்டின் மீது பாய்ந்து தலை கீழாக தொங்கிக்கொண்டிருந்தது.
இதில் அதிர்ச்சி அடைந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியில் ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

