செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
ddf106da-bad6-4ea9-bec0-2e190e0acd17
-

மருத்துவமனையில் மன்சூர் அலிகான்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சிறுநீரகத் துறை மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குழந்தை தோற்றத்தில் 25 வயது பெண்; உதவி கோரும் தந்தை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், புளியராஜக்கா பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன், 55. கொய்யாப்பழ வியாபாரியான இவரது மகள் சுதாவுக்கு பிறக்கும்போதே உடல், மனவளர்ச்சி இல்லை. தற்போது 25 வயதாகும் சுதா தோற்றத்தில் குழந்தை போலவே இருந்தாலும் அவரால் நடக்கவோ, வாய் பேசவோ முடியாது. காதும் கேட்காது. கை ஜாடை செய்துதான் வேண்டியதைக் கேட்பார். சுதாவிற்கு மாற்றுத் திறனாளிக்கான தமிழக அரசின் உதவித் தொகை ரூ.1,000 வருகிறது. இருப்பினும், போதிய வருமானமின்றி சுதாவின் மருத்துவச் செலவு, உணவுக்காகச் சிரமப்பட்டு வரும் காளியப்பன், சுதாவிற்கு உதவி செய்யும்படி கோரியுள்ளார்.