ஸ்டாலின்: மக்கள் எதிர்பார்க்கும் அமைதியான சூழலை உருவாக்குவது காவல்துறையின் கடமை

1 mins read
d39129b5-900d-487e-a418-6fd78a07804c
மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

சென்னை: எந்த அர­சாக இருந்­தா­லும் மாநி­லத்­தில் அமைதி நிலவ வேண்­டும் என்­பதே மக்­க­ளின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமிழகத்தில் காவல்துறை துணை ஆய்­வா­ளர்­க­ளாக தேர்வாகி உள்ள 941 பேர்க்குப் பணி நியமன ஆணை வழங்­கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், மக்­கள் எதிர்­பார்க்­கும் அமை­தி­யான சூழலை உரு­வாக்­கித் தரும் மாபெ­ரும் கடமை காவல்­து­றைக்கு உள்­ளது என்­றார்.

"இந்­தக் கட­மையைப் பணி­யில் சேரும் அனை­வ­ரும் முத­லில் நெஞ்­சில் பதிய வைத்­துக்கொள்ள வேண்­டும். உடல்வளம், மனஉறுதி, அறிவுவளம் ஆகிய மூன்றும் உள்­ள­வர்­க­ளாக நீங்­கள் மாற வேண்­டும்.

"அநி­யா­யத்தைத் தடுக்க, எப்­போ­தும் தயங்­கா­தீர்­கள். எப்­போ­தும் நியா­யத்­தின் பக்­கம் நில்­லுங்­கள். உண்­மைக் குற்­ற­வா­ளி­கள் அனை­வ­ரை­யும் சட்­டத்­தின்முன் நிறுத்­துங்­கள்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

காவல்­துறை எப்­போ­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டம் பரிவு காட்ட வேண்­டும் என்று வலி­யுறுத்­திய இவர், தாம் அறி­வு­றுத்திய அனைத்­தை­யும் காவல்­து­றை­யி­னர் சட்­டபூர்­வ­மாகச் செய்ய வேண்­டும் எனக் கேட்­டுக்கொண்­டார்.

"குற்­றங்­கள் குறைய வேண்­டும் என்­பதைவிட, குற்­றமே நடக்­காத சூழலை உரு­வாக்­கும் துறை­யாக, காவல்­துறை மாற வேண்­டும் என்­பது என்­னு­டைய ஆசை. இது உங்­கள் ஆசை­யா­க­வும் மாற வேண்­டும். நம் விருப்­பம் செய­லா­கத் துவங்­கி­னால் தமி­ழ­கம் செழிப்­ப­டை­யும்," என்றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.