கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்றே ஓடும் ரயிலில் மாணவர்கள் மோதல்; பெரும் அவதிக்குள்ளான பயணிகள்

2 mins read
dd13efd4-9a3e-46f1-a711-c4d646dcaa63
-

சென்னை: கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்ட முதல் நாளன்றே சென்­னை­யில் இரு­வேறு கல்­லூரி­களைச் சேர்ந்த மாண­வர்­கள் ஓடும் ரயி­லில் மோதிக்கொண்­ட­னர். இத­னால் ரயில் பய­ணி­கள் அவ­திக்கு ஆளா­கி­னர்.

பல மாதங்­க­ளுக்­குப் பின்­னர் தமி­ழ­கத்­தில் பள்ளி, கல்­லூ­ரி­கள் திறக்கப்­பட்­டுள்­ளன. பள்­ளி­களில் முதற்கட்டமாக 9, 10, 11, 12ஆம் வகுப்பு­கள் மட்­டும் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் மாநி­லம் முழு­வ­தும் உள்ள 85 விழுக்­காடு மாண­வர்­கள் பள்­ளி­க­ளுக்கு வந்­த­தாகத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில் கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்ட முதல்­நாளே சென்­னை­யில் உள்ள சில கல்­லூ­ரி­களில் மாண­வர்­கள் 'பேருந்து தினம்' கொண்­டாட இருந்ததாக ஒரு தக­வல் பர­வி­யது. பல கல்­லூ­ரி­களில் ஆண்­டு­தோ­றும் பேருந்து தினம் கொண்­டா­டப்­படு­கிறது.

எனி­னும் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக இத்­த­கைய கொண்­டாட்­டங்­கள் தற்­போது அனுமதிக்கப்படுவதில்லை. எனவே அனு­ம­தி­யின்றி பேருந்து தினத்தைக் கொண்­டாட மாண­வர்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தாகக் கிடைத்த தக­வலை அடுத்து, சென்­னை­யில் குறிப்­பிட்ட சில கல்­லூரி மாண­வர்­க­ளைப் போலி­சார் தீவி­ர­மா­கக் கண்­கா­ணித்­த­னர்.

இது­போன்ற கொண்டாட்டங்­களின்போது வெவ்­வேறு கல்­லூ­ரி­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் மத்­தி­யில் கடந்த காலங்­களில் மோதல்­கள் ஏற்­பட்­டுள்­ளதை அடுத்து இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­­ளப்­பட்­டது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் வியா­சர்­பாடி பகு­தி­யில் புற­ந­கர் ரயி­லில் பய­ணம் செய்த இரு கல்­லூ­ரி­க­ளைச் சேர்ந்த தலா பத்து மாண­வர்­கள் இடையே திடீர் மோதல் ஏற்­பட்­டது.

அனை­வ­ரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பல­மா­கத் தாக்­கிக்கொண்­ட­னர். இத­னால் பய­ணி­களில் சில­ருக்கு தவ­று­த­லாக அடி விழுந்­தது. பலர் பெரும் அவ­திக்குள்ளா­கி­னர்.

எனி­னும் மோதல் குறித்து தக­வல் அறிந்த ரயில்வே போலி­சார் விரைந்து வந்து மாண­வர்­கள் மோதலை முடி­வுக்­குக் கொண்டு வந்­த­னர்.

மோதிக்­கொண்ட மாணவர்­களுக்குக் கடும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. எனி­னும் வழக்கு­கள் ஏதும் பதி­யப்­ப­ட­வில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.