சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வாக்களிக்கும் நேரம் காலை 7 முதல் இரவு 7 வரை நீட்டிக்கப்படுவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் விடுபட்டுப் போன வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் பணிகளில் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் விதிமுறைகளின்படி தேர்தலில் வாக்களிக்கும் நேரம் 10 மணி நேரத்துக்கு மிகாமல் காலை 7 முதல் மாலை 5.30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்களிக்கும் நேரத்தை காலை 7 முதல் இரவு 7மணி வரை 12 மணி நேரமாக தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.

