திருமணத்துக்கு அழைப்பில்லை; கொலையில் முடிந்தது தகராறு

1 mins read
4309f1d5-47c3-4016-8aab-cd1c3978cacf
-

புதுக்­கோட்டை: திரு­ம­ணத்­திற்கு ஏன் எனக்கு அழைப்பு விடுக்க வில்லை என்று கேட்டு வாக்கு வாதம் செய்த நண்­பனை, சக நண்­பர்­கள் கொலை செய்­துள்­ள­னர்.

புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் நடந்­துள்ள சம்­ப­வம் தொடர்­பாக போலி­சார் எட்டுப் பேரை கைது செய்­த­னர்.

கடந்த சனிக்­கி­ழமை ஆலங்­குடி யைச் சேர்ந்த விஜய்க்­கும் அவ­ரது நண்­பர் சசி­த­ர­னுக்­கும் இடையே மது போதை­யில் தக­ராறு ஏற்­பட்ட தாக­வும் அன்­றி­ரவே சசி­த­ரன் பத்­திற்­கும் மேற்­பட்ட நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து விஜய்யை வெட்டி கொன்ற தாக­வும் கூறப்­ப­டு­கிறது.

சசி­த­ரன் உள்­பட எட்டுப் பேரை கைது செய்த போலி­சார், இந்த சம்பவத்தில் தொடர்­பு­டைய மேலும் சில­ரையும் தொடர்ந்து தேடி வரு­கின்­ற­னர்.

ஆலங்குடி போலிசாரின் விசா­ர­ணை­யில் சசி­த­ர­னின் திரு­ம­ணத்­திற்கு விஜய்யை அழைக்­கா­த­தால் இரு­வ­ருக்­கும் இடையே கடும் வாக்கு­வா­தம் ஏற்­பட்­ட­தும் அதைத் தொடர்ந்து விஜய்யை சக நண்­பர்­க­ளு­டன் சசி­த­ரன் கொலை செய்­த­தும் தெரியவந்­தது.