பள்ளி செல்லாத 5,603 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தீவிரம்

பள்ளி செல்லாத 5,603 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தீவிரம்

1 mins read
c1010ef4-f945-4cfb-9b7b-2eee8033f97a
-

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பில் 5,603 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செப்டம்பர் 20ஆம் தேதி வரை இந்தக் கணக்கெடுப்பை தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் வீடு, வீடாகச் சென்று பள்ளி செல்லாத பிள்ளை களையும் இடையிலேயே படிப்பை நிறுத்திக்கொண்ட மாணவர்களையும் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் 10ல் துவங்கியது.