உசிலம்பட்டி: தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது உசிலம்பட்டி கிராமம். இந்தக் கிராம மக்கள் தங்களது ஊரில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் ெபரும் அவதிப்பட்டு வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
உசிலம்பட்டியில் ஏறக்குறைய 300 குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். விறகு வெட்டுவதும் துைடப்பம் தயாரிப்பதும்தான் இவர்களது முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
பள்ளிக்கூடம், மலிவு விலையில் பொருள்களை விற்கும் ரேஷன் கடை, மருத்துவ வசதி, பேருந்து வசதி, குடிநீர் வசதி என எந்த ஒரு வசதியும் கிடைக்காமல் அகதிகள் போல் இந்தக் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஐந்து வயதான ஒன்றாம் வகுப்பு மாணவன் தான் படிக்கும் பள்ளிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டிய அவலநிலையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
"மருத்துவ அவசர உதவி தேவை எனில், 20 கிலோமீட்டர் தூரமுள்ள தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்குவதற்காக பத்து கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்," என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இந்நிலையில், உடனடியாக குழந்தைகளின் நலன் கருதி இப்பகுதியில் பள்ளிக்கூடத்தை திறக்கவேண்டும் என மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் கூட இங்கு இல்லை. உலகம் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், எங்கள் கிராமம் மட்டும் 50 ஆண்டு காலம் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

