'11.72 லட்சம் மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும்'

2 mins read
a338d0df-a9f1-43d1-a3fc-3614c9b2d7b1
-

சென்னை: தமிழகப் பள்ளி மாணவர்கள் 11.72 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் படிப்படியாக விரைவில் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் தெரிவித்து உள்ளார்.

கல்வி ஆண்டு தொடங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே மடிக் கணினி வழங்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், நேற்று நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார்.

"2011ஆம் ஆண்டு முதல் மடிக் கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-12 ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை இதற்காக 6,349.63 கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. இதற்கிடையே, ஒரு சில காரணங்களால் மாணவர் களுக்கு தகுந்த நேரத்தில் மடிக் கணினிகள் சென்று சேரவில்லை.

"தற்போது படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்குவதற்கு நட வடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

2020-21 மற்றும் 2021-22ஆம் கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு படித்த சுமார் 10 லட்சம் மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் மடிக்கணினி வழங்கப்பட வேண்டியது உள்ளது.

"படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் அரசாணையில் தெரிவித்துள்ளபடி மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்," என்று கூறினார்.