சென்னை: சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. ரூ.900 கொடுத்து சமையல் எரிவாயு உருளையை வாங்கி சமைத்துச் சாப்பிடுவதற்குப் பதில் பட்டினி கிடக்க லாம் என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசாங்க மாவது தங்களின் சிரமத்தை உணர்ந்து எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.900.50 என எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் இருமுறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் இந்த உருளையின் விலை தலா ரூ.285 வரை விலை உயர்த்தப்பட்டு உள்ள தால், தினக்கூலி பெறுவோரும் கொரோனா நெருக்கடியால் வேலை இழப்புக்கு ஆளாகி உள்ளோரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ள தாக 'ஒன் இந்தியா' ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
"சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்," என்று இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.