மாணவர்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனை

மாணவர்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை கொவிட்-19 பரிசோதனை

1 mins read
8781a4fd-e9a2-4330-8f70-29c109d79675
சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடக்கும் தடுப்பூசி சிறப்பு முகாமில் 18 வயதுக்கும் மேலான மாணவர்கள், பாடம் போதிக்கும் ஆசிரியர்கள், இதர பணியாளர்களுக்கு சுகாதார ஊழியர்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டு விடுகின்றனர். படம்: இபிஏ -

சென்னை: மாநி­லத்­தில் உள்ள அனைத்­துப் பள்ளி மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­க­ளுக்கும் 15 நாள்­க­ளுக்கு ஒரு முறை கொரோனா பரி­சோ­த­னை நடத்­தும்­படி தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

இம்­மா­தம் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான பள்­ளிக்­கூ­டங்­களும் கல்­லூ­ரி­களும் திறக்­கப்­பட்­டன.

பள்ளி, கல்­லூ­ரி­களில் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர்­கள், ஊழி­யர்­க­ள் இருமுறை தடுப்­பூசி போட்­டி­ருப்­பது கட்­டா­யம் ஆக்­கப்­பட்­டுள்­ளது. போடா­த­வர்­கள் பள்­ளிக்கு வர­வேண்­டாம் என்­றும் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­க­ளுக்கு 15 நாட்­களுக்கு ஒரு­முறை ஆர்­டி­பி­சி­ஆர் கொரோனா பரி­சோ­தனை நடத்­த­வேண்­டும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

கிருமி பாதிப்பு கார­ண­மாக ஆங்­காங்கே ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் பாதிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் தக­வல்­கள் வெளி­வ­ரு­கின்­றன.

இந்­நி­லை­யில், இந்­தப் பாதிப்பு அதி­க­ரிக்­கும் வேளை­யில், சம்­பந்தப்­பட்ட பள்­ளி­கள் மூடப்­பட்டு சுத்­தப்­ப­டுத்­தும் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும் என்று மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­யுள்­ளார்.

சட்டச­பை­யில் முன்­னாள் சுகா­தா­ரத் துறை அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர் 'பூஸ்­டர்' தடுப்பூசி போடுவதில் அர­சின் நிலைப்­பாடு என்ன எனக் கேள்வி எழுப்­பி­னார்.

"உலக சுகா­தார நிறு­வ­னம் அனு­மதி அளித்­தால் 'பூஸ்­டர்' தடுப்­பூசி போடும் பணி­க­ளைத் தொடங்­கும் முதல் மாநி­ல­மா­க தமிழ்­நாடு இருக்­கும்," என­ மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கூறி­னார்.