மதுரை: பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், வாகனங்களில் தலைவர்கள் படத்தை நீக்க உத்தரவிட்டு உள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மதுரை உயர் நீதிமன்றத்
தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "வாகனங்களின் எண் பலகை கள் அனைவரும் எளிதில் காணும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.
"ஆனால், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கண்டுகொள்வதில்லை. இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஒட்டுவில்லை கள் ஒட்டுவதைத் தடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதி
பதிகள், "வாகனத்தில் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்படும் தலைவர்களின் புகைப்படத்தை 60 நாட்
களுக்குள் நீக்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
"அரசியல் கட்சிக்கொடி, கட்சித் தலைவர்களின் படம் போன்றவற்றைத் தேர்தல் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.
"வாகனத்தில் தடை செய்யப்பட்டுள்ள கண்ணாடிகளை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கிறோம்.
"60 நாட்களுக்கு மேல் இந்த உத்தரவுகள் மீறப்பட்டு இருக்கும் பட்சத்தில், வாகனங்களைப் பறி
முதல் செய்யவும் வாகனமோட்டி
களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்படுகிறது," என்று கூறினார்கள்.

